சனி, 24 ஜனவரி, 2009

பிரச்சனை எல்லாம் ஒன்றுதான்...




அமெரிக்கா.. இப்போது ராயபுரத்தில இருந்து ராமேஸ்வரம் வரைக்கும் நம்ம ஆளுங்க சொல்ற வார்த்தை இதுதான்... அமெரிக்கா போகணும்... அங்கே வேலை செய்யணும்.. நிறைய சம்பாதிக்கணும்.. அப்புறம் இங்க வந்து செட்டில் ஆகணும்... இதுதான்.. இதுதான் இன்றைய இளைஞர்களின் தேசிய வாக்கு.. அப்படி என்னதான் இருக்கோ அந்த அமெரிக்காவுல..போன மாசம் நம்ம நண்பர் பாலான்னு ஒருத்தர் அமெரிக்காவுக்கு வேலை விஷயமா போயிட்டு வந்தார்.. வந்த நாள்ல இருந்து அமெரிக்கா.. அமெரிக்கா.. டாலர்.. டாலர்... அங்கெல்லாம் அப்படி இருந்துச்சு.. இப்படி இருந்துச்சு... இதேதான் சொல்லிட்டு இருக்கார்.. அவர் மாற இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் போல இருக்கு.. இன்னும் சொல்லப்போனா, அவர் மாறுவதற்கு சான்ஸ் ரொம்ப கம்மி.. ஏன்னா மறுபடியும் அவர் அதே அமெரிக்கா போறார். அங்கேயே செட்டில் ஆகப் போறாராம்..அவருக்கு இந்த அமிஞ்சிக்கரை புடிக்கல, அமெரிக்காதான் புடிச்சிருக்கு... என்ன பண்றது.. நம்ம ஊரு அப்படி இருக்கு.. எங்க பாத்தாலும் pollution, traffic, crowd... இதெல்லாம் மாறுச்சுன்னா அவர் இந்தியா போல வருமான்னு சொல்லுவார்.. ஆனா அதுக்கெல்லாம் ரொம்பவே லேட் ஆகும்..
அந்த நாடுகள் மட்டும் எப்படி இவ்ளோ வளர்ந்து இருக்கு.. நம்ம நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் வளர்ச்சியில difference இருக்காம்..அப்புறம் எப்படி.. அதுக்குள்ளே நம்ம ஆளுக்கு வயசாயிடும்.. பேரன், பேத்தி எடுக்க வேண்டிய வயசுல வேலை தேட முடியாது..
யாருக்கும் தெரியாம அமெரிக்காவுல பிட்சை எடுத்தா, இந்தியாவுல வீடு வாங்கலாம்... ஆனா அதே இந்தியாவுல பிட்சை எடுத்தா அமெரிக்கா போக டிக்கெட் கூட வாங்க முடியாது... இதுதான் வாழ்க்கை..
ஆனா ஒன்னு.. இங்க திறமைய மதிக்கறது இல்ல... எங்க பாத்தாலும் பாலிடிக்ஸ். எவன் எப்போ தப்பு செய்வான்.. அவனை குனிய வெக்கலாம்னு பாக்கறதுதான் பழக்கம்.. அங்கே அதெல்லாம் கிடையாது... நீ உழைச்சா காசு... எவ்ளோ நேரம் உழைக்கரியோ அதுக்குத்தான் காசு.. உன்னோட வேலைக்குத்தான் மரியாதை.. நீ யாருன்னு எல்லாம் யாரும் பாக்கறது இல்ல... அதுதான் நம்ம ஆளுங்க ஓடறதுக்கு காரணம்...
அதேபோல, அங்க ரொம்பவே கஷ்டப்பட்டுதான் நம்ம ஆளுங்க வேலை செய்யறாங்க.. சும்மா ஒன்னும் வெள்ளைக்காரனும் தூக்கி குடுக்கல.. நம்ம ஆளுங்களோட ரத்தத்தை எல்லாம் உறிஞ்சிட்டுதான் பணம் கொடுக்கறான்.. கிட்டத்தட்ட, நம்ம ஊர்ல இருக்கற IT கம்பெனிங்க எல்லாருமே, இப்படித்தான் செய்யறாங்க.. அதே வேலைய கொஞ்சம் சொகுசா செஞ்சா அதிகமா காசு வரும்னா, யாருதான் செய்ய மாட்டாங்க.. நானே செய்வேன்... ப்ரீயா இருக்கறதாலத்தான் இதெல்லாம் எழுதிட்டு இருக்கேன்.. ஒழுங்கா இந்த வாரம் வேலை செய்யவே, எழுதக்கூட முடியல...

இதை விட கொடுமை நம்ம கால் செண்டர்ல வேலை செய்யறவங்களோட நெலமை.. எனக்கு தெரிஞ்சு சென்னைல இருக்கற ஒரு பெரிய கம்பெனில இருந்து சுமார் 150 பேர வேலைய விட்டு போன வாரம் அனுப்பிச்சாங்க.. இது ஒரு கம்பெனியோட நெலமைதான்... இது போல தெரியாம எத்தனையோ பேர daily அனுப்பிகிட்டே இருக்காங்க... அவங்களோட கதி என்ன...? போன மாசம் வரைக்கும் மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கனவனோட கதி???... அதோ கதிதான்!!! எப்படியும் கௌரவுத்துக்காக ஒரு கார் கண்டிப்பா வெச்சிருப்பான்.. அது நிச்சயமா லோன்லதான் இருக்கும்.. அதுக்கு due கட்ட முடியாது... வீடையும் லோன்லதான் வாங்கியிருப்பான்... IT கம்பெனின்னவுடனே பேங்குக்காரன் உடனே குடுத்திருப்பான்... அதெல்லாம் ஒரு மாசத்துக்கு சமாளிக்க முடியும்.. பிறகு, கோவிந்தாதான்...
இப்போ சத்யம் கம்பெனியால இந்திய வர்த்தகமே சரிஞ்சிருக்கு.. இதனால ஏற்பட்ட இழப்புக்கு யார் காரணம்... பங்கு வர்தகத்துல முதலீடு செஞ்சவங்களோட கதி என்ன... இன்னையவெரைக்கும் மத்திய அரசு அதுல மெத்தனம் காட்றது எதுனால..
ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் சும்மா இருக்கற CBI யை கிளறி, நீதி விசாரணை வேண்டும், CBI விசாரணை வேண்டும்னு சொல்றவங்க எல்லாம் ஏன் அமைதியா இருக்காங்க... இவங்களும் சத்யம்ல பங்க வாங்கி போட்டுட்டாங்களோ... சந்தேகமா இருக்கு...
அப்படியே ஒரு வேளை பங்கு வாங்கியிருந்தா, தயவு செஞ்சி சண்டை போட்டாவது claim பண்ணுங்களேன்... உங்களால மக்களுக்கு நன்மை கிடைச்சதுன்னு இருக்கட்டும்... மேற்கொண்டு, ஆந்திர அரசியல்ல ஏதோ பெரிசா உள்குத்து நடந்திருக்குன்னு தோனுது...
ஏன்னா இவ்ளோ நஷ்டத்துல இருக்குற ஒரு கம்பெனி, அரசாங்கத்துக்காக இலவசமா EMRI சர்விஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன..? அப்போ ஆந்திர முதல்வரோட சத்யம் கூட்டு வச்சிக்கிட்டு, என்னமோ பண்ணியிருக்காங்க... நீ நெல் எடுத்துட்டு வா.. நான் உமி எடுத்துட்டு வாறன்.. ஊதி ஊதி திங்கலாம்னு ரெண்டு பேரும் நெல்லே கொண்டு வராம, ஊரான் வீட்டு நெல்ல வெச்சு வியாபாரம் பண்ணியிருக்காங்க.. எங்கேயோ எவனுக்கோ புடிக்காம போய்த்தான், இப்போ சத்யம் நிர்வாகி திரு. ராஜு மாட்டிகிட்டார்..
இதுல அவருக்கு மட்டும் பங்கு இல்ல.. அவர் கையெழுத்து மட்டும்தான் போட்டிருப்பார்... அதை கணக்கு பார்த்த ஆடிட்டிங் கம்பெனி பத்தி ஒரு வரி இல்ல... மத்தபடி கம்பெனி பங்குதாரர்கள பத்தி ஒன்னும் தகவல் இல்ல.. இது தனி ஒரு மனுஷன் செஞ்ச காரியம் இல்லை.. இதுக்கு பின்னாடி ஒரு தேசிய சதியே இருக்கு.. இதே போல எல்லாரும், தன்னோட நிர்வாகக் கணக்கை அதிகமாக்கிக் காமிச்சா என்னாகும்.. பட்டுன்னு ஒரு நாள் 5 லட்சம் கோடி, வெறும் 5 ரூபாய் ஆகிடும்.. அதை வெச்சு .................. பீடா கூட வாங்க முடியாது...

திங்கள், 19 ஜனவரி, 2009

நல்ல மனிதர் மன்மோகன் சிங்...




நல்ல மனிதர் மன்மோகன் சிங்... நம்ம பிரதமர் ரொம்ப நல்லவர்...
மிக்க நாணயமானவர்.. மற்றும் நேர்மையானவர்... இருக்காதா பின்ன...
கவுன்சிலரே ஸ்கார்பியோல போகும்போது இந்த மனுஷன் தன்னுடைய ஸ்கூட்டர் லைசென்ஸை Renewal பண்ணி இருக்கார்... இனிமே ஸ்கூட்டர்ல போவார் போல இருக்கு..110 ஆ 120 ஆன்னு சரியாத் தெரியல.. இவ்வளவு மக்கள் இருக்குற இந்த நாட்டுல, எப்படியும் 50 கோடி பேர்தான் லைசென்ஸே வச்சிருப்பானுக.. அதுலயும் பாதி duplicate ஆகத்தான் இருக்கும்..
இதுல இவர் இப்போ எதுக்கு லைசன்ஸ renewal பன்னார்னே தெரியல... ஒருவேளை இப்போ நடக்குற ஆட்சி ஊத்திக்கிச்சின்னா அரசாங்கம் கொடுத்த காரை திருப்பி வாங்கிடுவாங்களோன்னு யோசிச்சு renewal பண்ணார்னு நினைக்குறேன்.. ஆனா ரொம்ப பாவமுங்க அவர்.. எல்லோரும் சேர்ந்து அவரை நல்ல ஏமாத்திடுறாங்க..

இதுநாள் வரை எந்த மினிஸ்டராவது ஸ்கூட்டர் லைசன்ஸ் எடுக்கப்போனார்னு கேள்விப்பட்டிருக்கீங்களா.. ஏன்னா, ஒன்னு யாருக்கும் வண்டி ஓட்டத் தெரியாது.. அப்படியே ஓட்டத் தெரிஞ்சாலும் இப்போ அவங்களால அதை ரோட்டுல ஓட்ட முடியாது.. ஏனா கூட பாதுகாப்புக்கு வர போலீஸும் ஸ்கூட்டர்லதான் வரணும்.. அதுக்கே ஒரு மினிஸ்டருக்கு 10 ஸ்கூட்டர் வாங்கணும்.. சிக்கன நடவடிக்கைன்னு ஒரு கார்ல இருந்து 4 ஸ்கூட்டர்க்கு மாத்தி புரட்சி செய்வாங்களோ என்னமோ..

ஆனா, இது ஒரு நல்ல முன்மாதிரி.. ஒரு நாட்டோட பிரதமரே RTO Office வந்து லைசன்ஸ் எடுக்குறார்னா அது நிச்சயம் வரலாறுதான்.. நல்ல முயற்சி.. இனி இது போன்று தொடர்ந்து நடந்தால் தினசரி எல்லா RTO Office-லயும் ஏதோ ஒரு எம்.பியோ., ஒரு எம்.எல்.ஏவோ விஜயம் செய்வாங்க.. அதுனால ஆபிஸ்ல கொஞ்சம் ஒழுங்கா வேலையும் செய்வாங்க..

இதுலேயும் ஒரு பிரச்சனை இருக்கு.. தினசரி ஒரு VIP வந்தா அவங்களை கவனிக்கவே ஆபிசர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்.. அப்புறம் அவங்களோட வர்ற அடிப்பொடிகள் ரவுசும் தாங்க முடியாதே... நல்லது செஞ்சாலும் தப்பு... கெட்டது செஞ்சாலும் தப்பு.. ஒன்னே ஒன்னு சொல்லலாம்... ஹி ஹி..

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

நண்பர்களே!!! வாழ்க்கைத் துணையை நம்புங்கள்..




வாழ்க்கைத் துணை அமையறது ஓட்டல்ல சாப்பிடற டிபன் மாதிரி.. ஆர்டர் பண்ண பிறகு அடுத்த டேபிள்ள இருக்கறவன் சாப்பிடறது மேல மனசு போகும்.. இதைவிட அது நல்ல இருக்குமோன்னு லைட்டா யோசிக்கத் தோணும்..
ஹி!! ஹின்னு சிரிக்கற மேட்டர் இல்ல இது.. கொஞ்சம் சீரியசா யோசிக்க வேண்டிய விஷயம்..
எல்லாரும் நல்ல இருக்கானுவ.. நாம மட்டும்தான் இப்படி.. நம்ம லைப் மட்டும்தான் இப்படி இருக்குன்னு எல்லா கணவன்-மனைவிக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில வாழ்க்கையில நிச்சயம் தோணியிருக்கும்.. ஆசைப்படுற வாழ்க்கை எல்லாருக்கும் அமையறது இல்ல... அமையற வாழ்க்கைய யாரும் வெறுக்கறதும் இல்ல.. விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பற மனசை வளர்த்துக்கிட்டா யாருக்கும் எந்தவித பிரச்சனையும் வரதில்லை...
தூய்மையான காதல் மனம் விட்டு மனம் தாவ துடிக்காது.. கல்யாணத்துக்கு முன்னாடி ஏற்படுற காதலை இதுல எடுத்துக்க வேண்டாம்.. அதுக்கு பிறகுதான் ரெண்டு பேருக்கும் ஒரு அன்னியோன்யம் வருது..
எத்தனை பேர் நிச்சயம் பண்ண பிறகு கல்யாணம் வரை பொண்ணுகிட்ட கடலை போடாம இருக்கானுவ.. செல்ல எடுத்தா மணிக்கணக்குல பேசிப்பேசி அந்த பொண்ணு மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்றானுங்க.. அப்புறம் அந்த பொண்ணு நம்ம புருஷன் ரொம்ப நல்லவர்னு அதுவா ஒரு கற்பனைல நெனச்சிகிட்டு இருக்கு.. கல்யாணத்துக்கு பிறகு, ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்.. அதுக்கப்புறம்.. தினசரி ஏதாவது ஒரு ரூபத்துல ஒரு பிரச்சனை வரும்..
கடலை போடும்போது இருந்த அந்த காதல், கல்யாணமான புதுசுல இருந்த அந்த காதல்... அப்புறம் காணாம போயிடுது... ஒரு பொருள் புதுசா இருக்கற வரைக்கும்தான் அது மேல ஒரு ஆசை இருக்குது... அதுவே பழசாக ஆக... போரடிக்க ஆரம்பிச்சுடுது... ஆனா காதலிக்கற பொண்ணை எத்தனை வாட்டி பார்த்தாலும், பேசினாலும் பத்தாத மாதிரியே ஒரு பீலிங் இருக்கும்... ஏன்னா காதல்ல எப்பவுமே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்... அது கல்யாணம் பண்ணப்புறம் மிஸ்ஸிங்...
அது என்னன்னு சொல்ல முடியாது... உங்களுக்கே தெரியும்... ஆரம்பத்துல Attract பண்ணனும்னு ஒரு ஆர்வத்துல அசத்தும் ஆண்கள், அந்த எண்ணம் நிறைவேறியவுடன் அந்த ஆர்வத்தை குறைத்தால் பரவாயில்லை... அந்த எண்ணத்தையே குழி தோண்டி புதைத்து விடுகிறான்... இதுதான் பிரச்சினையே... அங்குதான் அவன் தன்னுடைய நிஜமான முகத்தை காட்டுகிறான்..
காதலிக்கும் போதோ, கல்யாணமான புதிதில் இவன் இப்படி இல்லையே... இப்போ புதுசா என்ன கோவப்படுறார்ன்னு மனைவி நினைக்கும் போதுதான் சண்டையும், காழ்ப்புணர்ச்சியும் ஆரம்பிக்கின்றன...
"விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கையின் சிறப்புன்னு" கண்ணதாசன் சொல்லியிருக்கார்... எப்போ ஈகோன்ற போர்வை போத்த ஆரம்பிக்கறாங்களோ, அப்பவே அவங்களுக்குள்ள இருக்கற காதல் செத்துப்போகுது...
இந்த காதலை மெருகு குலையாமல் வைத்திருப்பது ரொம்ப ஈசிப்பா..
இப்போதான் மெயின் மேட்டெருக்கு நான் வர்றேன்..
கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியும் பொண்ணை அசத்தறதுக்கு கிப்ட் கொடுக்க காரணம் தேடுவீங்கள்ள... அதே மேட்டர்தான்..
அப்பப்போ.. சின்ன சின்னதா கிப்ட் கொடுத்து அசத்தலாம்... புடவை, மோதிரம், செயின்னு வாங்கனும்னு அவசியம் இல்லை.. ரொம்ப நாள் முன்னாடி, ரோட்டுல போகும்போது கேட்ட கடாயோ, ஏன் கரண்டி கூடத்தான் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வாங்கிக்கொடுக்கலாம்..
life fulla கூட இருக்கப்போற ஒரு ஜீவனுக்காக, நமக்காக, நம்ம family-க்காக உழைக்கிற அவங்ககிட்ட, daily சாப்டியான்னு ஒரு போன் பண்ணி கேட்டாக்கூட போதும்.. சந்தோசமாயிடுவாங்க..
சாப்பாட்டுல உப்போ, காரமோ அதிகமவோ, குறைஞ்சோ இருந்தால் என்ன உரிமைல திட்டுவீங்களோ, அதே சமையல் நல்ல இருந்துச்சுன்னா என்னைக்காவது பாராட்டி இருக்கீங்களா.. அதை செஞ்சி பாருங்க... அடுத்தவாட்டி சமையல் இன்னும் நல்லா செய்வாங்கோ... எங்க அம்மா இதைவிட நல்லா செய்வாங்கன்னு மட்டும் சொல்லிடாதீங்க... அதோட மேட்டர் ஓவர்..
அவங்களுக்கே தெரியாமல் அவங்களுக்குள் இருக்கும் திறமைய கண்டு பாராட்டினா உங்க மேல இன்னும் affection and love அதிகமாகும்...
மாதம் ஒரு வாட்டி மனைவிய குழந்தைகள் இல்லாமல் தனியாக வெளியே கூட்டிட்டு போங்க பாஸ்.. அப்புறம் பாருங்க.. லவ்வுடு ஸ்டார்ட் ஆயிடும்...
உண்மையா அவங்கள நம்புங்க.. நீங்க நம்புறீங்கன்னு அவங்கள நம்ப வைங்க... அது போதும்...
"சின்னதாய் ஒரு தாஜ்மஹால் கட்ட ஆசை... எப்போதடி சாவாய்" அப்படிங்கற ரேஞ்சுல பொண்டாட்டி மேல புருஷன் affection வச்சிருந்தா.... அவ்ளோதான்... க்ளோஸ்...

சனி, 17 ஜனவரி, 2009

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 93 வது பிறந்தநாள்



புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது பிறந்தநாள் விழா தமிழகம் முழுக்க மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், மனிதநேயம் மிக்கவர். ஏழைகளின் வள்ளல். அது மட்டுமல்ல. பண்பானவர், நல்ல குணமுள்ளவர். அவரைப் போன்று மற்றுமொரு மாமனிதரை காண்பதரிது.
என்ன.. ஒரே கவலை, இத்தனை நாளா அவரை யாரும் சீண்டக்கூட இல்லை. இப்போ என்னடா புதுசா பாசம்னு பார்த்தா, ஹி..ஹி..ஹி..!!!
எலெக்சன் வருது!!! எலெக்சன் வருது!!! டும் டும் டும்...
முதல்வர் நண்பர்னு சொல்றார்.. அம்மா தானை தலைவர்னு சொல்றாங்க...
விஜயகாந்த் நாந்தான் அவர் ஜெராக்சுனு சொல்றார்.. பத்தாதக்கு நம்ம நாட்டமை வேற...
எனக்கு ஒண்ணுமே புரியல.. இவங்கதான் பிறந்தாங்களா நாட்டுல... மத்த யாருக்குமே நாட்டு மேல அக்கறை இல்லையா..??
ஒரே ஒரு சந்தோஷம் என்னன்னா... இதுலயும் நம்ம பா.ம.க. கட்சி நிறுவனர் அய்யா ராமதாசு மட்டும் சேரவே இல்ல.. அவர் எம்.ஜி.ஆர். பேர சொல்றதே இல்ல.. ஏன்னா அவருக்கு தெரியும்.. இந்த பருப்பு வேகாதுன்னு.. மக்களை அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாதுன்னு..
அதனாலத்தான் அவர் சமீபத்துல நடைபெற்ற இடைத்தேர்தல்ல கலந்துக்கல.. ஏன்னா கூட்டணி இல்லன்னா, சட்னி கூட அரைக்க முடியாதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும்...
என்னமோ... எம்.ஜி.ஆர் பேரச் சொல்லி இன்னைக்கு அங்கங்கே சில இடத்துல ஏழைகளுக்கு அன்னதானம் நடந்துச்சு.. அன்னதானம் நடந்துச்சா, இல்ல அம்மா சொல்லி தானம் நடந்துச்சா தெரியல... நல்லது நடந்த சரி..
அந்த மக்கள் தொண்டர் மறுபடி உயிரோடு வர வேண்டும்னு நான் சத்தியமா வேண்டிக்க மாட்டேன்.. ஏன்னா, இப்போ இருக்குற அரசியல் நிலைமைல, அவரையும் மாத்திடுவாங்க...
நல்லவர் நல்லவராகவே இருக்கட்டும்...

இந்த நேரத்தில் அவரைப் பற்றி அனிமேஷன் படம் எடுக்கப் போவதாக செய்தியில் வந்தது.. (பார்க்க மேலே படம்).. மிகவும் வரவேற்கத்தக்க விஷயம்.. அந்தப் படம் எடுப்போர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. நல்ல சரித்திரப் பின்னனியிலோ அல்லது த்ரில்லெர் வகையிலோ கதை அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...
அவரது வாழ்கை வரலாற்றை படமெடுத்தால்... Very Sorry... படத்தை ரிலீஸ் செய்யவே சிரமப்பட வேண்டியிருக்கும்..
மறைந்தும் எதிரிகள் உள்ள மனிதர் அவர் மட்டும்தான்...

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்... மாபெரும் வீரர், மானம் காப்போர்... சரித்திரம் தனிலே நிற்கின்றார்..."

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பலர்... (கிரிக்கெட்)

நேற்று இலங்கைக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடந்துச்சு. ஆஸ்திரேலியா தென்ஆப்ரிக்கா போட்டிய விட இது ரொம்பவே சுவாரஸ்யமா இருந்துச்சு.

இருக்காத பின்ன.. 50 ஓவர்ல வங்காள புலிகளை 152 ரன்ல சுருட்டியது இலங்கை சிங்கம்.. அஜந்தா மென்டிஸ், முரளிதரன் சுழல்லயும், குலசேகரவோட வேகத்துலேயும்..

பின்னே ஆடிய சிங்கங்கள் கதி என்ன.???

ங்கொக்க மக்க.. கொஞ்சம் miss ஆயிருந்தா.. சிங்கம் அசிங்கம் ஆயிருக்கும்..
டிவிய ஆன் பன்னி பார்த்தா 8 ஓவருக்கு scoreboard 6/5 ன்னு இருந்துச்சு.. என்னடான்னு கண்ணை கசக்கிட்டு பார்த்தா நிஜம்மாவே சிங்கம்தான் ஆடிட்டு இருக்கு... 6 ரன்னுக்கு 5 விக்கெட் காலி.சரி.. மேட்ச் முடிஞ்சது.. இனிமே இவனுங்க ஜெயிக்க மாட்டங்கன்னு நம்ம வேலைய பாக்க போயிட்டேன்.. evening வந்து பார்த்த இலங்கை ஒரு வழியா ஜெயிச்சுடானுங்க..
எப்படின்னு பார்த்தா நம்ம தமிழன், சென்னை மாப்பிள்ளை முரளிதரன் 46 வது ஓவர்ல மட்டும் திடீர்னு 20 ரன் அடிச்சு மேட்சை திருப்பிட்டார்.
கடைசியா இலங்கை சிங்கள இராணுவம் மாதிரி பரிதாபமா win பண்ணுச்சு..

என்ன இருந்தாலும் ஒரு தமிழனால்தான் வெற்றி கிடைச்சிருக்கு.. ஆனா அவுங்க நாட்டுல தமிழனைத்தான் அடி பிரிக்கறாங்க.. தமிழன் எங்க போனாலும் ஜெயிக்கறான்யா.. அங்க மட்டும்தான் முடியல.. வடிவேல் சொல்ற மாதிரி... சின்ன புள்ளத்தனமா இருக்கு..

நம்ம முதல்வர் பாவம்.. எவ்வளுவுதான் letter எழுதுவார். கண்ணீர் மடல்கள்தான் அதிகம்.. சிங்கள அரசுக்கு சிங் அரசு ரொம்பவே உதவி செய்யுது.. இதுவே சிங் அரசு ஆட்சிக்கு வந்தவுடனே நடந்திருந்தா, இந்நேரம் முதல்வர் அட்லீஸ்ட் ஆட்சிய கவுத்திருப்பார்.. முடியற டைம்தானேன்னு ரெண்டு பேரும் அலட்சியமா இருக்காங்க...what to do.. எல்லாம் அடுத்த எலெக்சனுக்கு பிளான் பண்றாங்க போலிருக்கு..

மும்பைல பாம் வெடிச்சதும், அது பாகிஸ்தானின் சதின்னு சொல்லி போருக்கே தயார் ஆயிட்டாங்க... கிரிக்கெட் விளையாட கூட நம்ம ப்லேயர்சை அனுப்பல..
ஆனா, இங்கே ஒரு ரத்த ஆறே ஓடுது... அதுல ஜாலியா விளையாட அனுப்பறாங்க... என்ன கொடுமை சார் இது....

என்னமோப்பா.. அடுத்து வரப்போற ஆட்சி யாருதா இருந்தாலும் உதை வாங்கபோறது நம்ம ஆளுங்கதான்..

பார்ப்போம்.. நடப்பது நாராயணன் செயல்.. இருப்பது ஈசன் செயல்...

வெள்ளி, 16 ஜனவரி, 2009

எனது முதல் படைப்பு..!!!

எல்லோருக்கும் வணக்கம்!!!
நானும் ரொம்ப நாளா இந்த ப்ளாக்கில எழுதனும் என்று ஆசை. ஒரு வழியா இப்போதான் அதுக்கு டைம் கிடச்சுது..
இனிமே தொடர்ந்து எழுத போறேன்... ஏற்கனவே எழுதறவங்க தயவு செஞ்சு கொஞ்சம் உங்களோட பெரும் ஆதரவை எனக்கும் அளிக்கணும்னு கேட்டுக்கறேன். பதிவில் நம்மளையும் கொஞ்சம் பின் தொடருங்கள் ப்ளீஸ்..

ஏதேனும் குற்றம், குறை, நிறைகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்..
தாரளமாக சுட்டிக்காட்டுங்கள்.. நிவர்த்தி செய்து கொள்கிறேன்.

மிக்க நன்றிகள்..

சைதை பிரேம்