சனி, 17 ஜனவரி, 2009

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 93 வது பிறந்தநாள்



புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது பிறந்தநாள் விழா தமிழகம் முழுக்க மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், மனிதநேயம் மிக்கவர். ஏழைகளின் வள்ளல். அது மட்டுமல்ல. பண்பானவர், நல்ல குணமுள்ளவர். அவரைப் போன்று மற்றுமொரு மாமனிதரை காண்பதரிது.
என்ன.. ஒரே கவலை, இத்தனை நாளா அவரை யாரும் சீண்டக்கூட இல்லை. இப்போ என்னடா புதுசா பாசம்னு பார்த்தா, ஹி..ஹி..ஹி..!!!
எலெக்சன் வருது!!! எலெக்சன் வருது!!! டும் டும் டும்...
முதல்வர் நண்பர்னு சொல்றார்.. அம்மா தானை தலைவர்னு சொல்றாங்க...
விஜயகாந்த் நாந்தான் அவர் ஜெராக்சுனு சொல்றார்.. பத்தாதக்கு நம்ம நாட்டமை வேற...
எனக்கு ஒண்ணுமே புரியல.. இவங்கதான் பிறந்தாங்களா நாட்டுல... மத்த யாருக்குமே நாட்டு மேல அக்கறை இல்லையா..??
ஒரே ஒரு சந்தோஷம் என்னன்னா... இதுலயும் நம்ம பா.ம.க. கட்சி நிறுவனர் அய்யா ராமதாசு மட்டும் சேரவே இல்ல.. அவர் எம்.ஜி.ஆர். பேர சொல்றதே இல்ல.. ஏன்னா அவருக்கு தெரியும்.. இந்த பருப்பு வேகாதுன்னு.. மக்களை அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாதுன்னு..
அதனாலத்தான் அவர் சமீபத்துல நடைபெற்ற இடைத்தேர்தல்ல கலந்துக்கல.. ஏன்னா கூட்டணி இல்லன்னா, சட்னி கூட அரைக்க முடியாதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும்...
என்னமோ... எம்.ஜி.ஆர் பேரச் சொல்லி இன்னைக்கு அங்கங்கே சில இடத்துல ஏழைகளுக்கு அன்னதானம் நடந்துச்சு.. அன்னதானம் நடந்துச்சா, இல்ல அம்மா சொல்லி தானம் நடந்துச்சா தெரியல... நல்லது நடந்த சரி..
அந்த மக்கள் தொண்டர் மறுபடி உயிரோடு வர வேண்டும்னு நான் சத்தியமா வேண்டிக்க மாட்டேன்.. ஏன்னா, இப்போ இருக்குற அரசியல் நிலைமைல, அவரையும் மாத்திடுவாங்க...
நல்லவர் நல்லவராகவே இருக்கட்டும்...

இந்த நேரத்தில் அவரைப் பற்றி அனிமேஷன் படம் எடுக்கப் போவதாக செய்தியில் வந்தது.. (பார்க்க மேலே படம்).. மிகவும் வரவேற்கத்தக்க விஷயம்.. அந்தப் படம் எடுப்போர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. நல்ல சரித்திரப் பின்னனியிலோ அல்லது த்ரில்லெர் வகையிலோ கதை அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...
அவரது வாழ்கை வரலாற்றை படமெடுத்தால்... Very Sorry... படத்தை ரிலீஸ் செய்யவே சிரமப்பட வேண்டியிருக்கும்..
மறைந்தும் எதிரிகள் உள்ள மனிதர் அவர் மட்டும்தான்...

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்... மாபெரும் வீரர், மானம் காப்போர்... சரித்திரம் தனிலே நிற்கின்றார்..."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக