
வாழ்க்கைத் துணை அமையறது ஓட்டல்ல சாப்பிடற டிபன் மாதிரி.. ஆர்டர் பண்ண பிறகு அடுத்த டேபிள்ள இருக்கறவன் சாப்பிடறது மேல மனசு போகும்.. இதைவிட அது நல்ல இருக்குமோன்னு லைட்டா யோசிக்கத் தோணும்..
ஹி!! ஹின்னு சிரிக்கற மேட்டர் இல்ல இது.. கொஞ்சம் சீரியசா யோசிக்க வேண்டிய விஷயம்..
எல்லாரும் நல்ல இருக்கானுவ.. நாம மட்டும்தான் இப்படி.. நம்ம லைப் மட்டும்தான் இப்படி இருக்குன்னு எல்லா கணவன்-மனைவிக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில வாழ்க்கையில நிச்சயம் தோணியிருக்கும்.. ஆசைப்படுற வாழ்க்கை எல்லாருக்கும் அமையறது இல்ல... அமையற வாழ்க்கைய யாரும் வெறுக்கறதும் இல்ல.. விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பற மனசை வளர்த்துக்கிட்டா யாருக்கும் எந்தவித பிரச்சனையும் வரதில்லை...
தூய்மையான காதல் மனம் விட்டு மனம் தாவ துடிக்காது.. கல்யாணத்துக்கு முன்னாடி ஏற்படுற காதலை இதுல எடுத்துக்க வேண்டாம்.. அதுக்கு பிறகுதான் ரெண்டு பேருக்கும் ஒரு அன்னியோன்யம் வருது..
எத்தனை பேர் நிச்சயம் பண்ண பிறகு கல்யாணம் வரை பொண்ணுகிட்ட கடலை போடாம இருக்கானுவ.. செல்ல எடுத்தா மணிக்கணக்குல பேசிப்பேசி அந்த பொண்ணு மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்றானுங்க.. அப்புறம் அந்த பொண்ணு நம்ம புருஷன் ரொம்ப நல்லவர்னு அதுவா ஒரு கற்பனைல நெனச்சிகிட்டு இருக்கு.. கல்யாணத்துக்கு பிறகு, ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்.. அதுக்கப்புறம்.. தினசரி ஏதாவது ஒரு ரூபத்துல ஒரு பிரச்சனை வரும்..
கடலை போடும்போது இருந்த அந்த காதல், கல்யாணமான புதுசுல இருந்த அந்த காதல்... அப்புறம் காணாம போயிடுது... ஒரு பொருள் புதுசா இருக்கற வரைக்கும்தான் அது மேல ஒரு ஆசை இருக்குது... அதுவே பழசாக ஆக... போரடிக்க ஆரம்பிச்சுடுது... ஆனா காதலிக்கற பொண்ணை எத்தனை வாட்டி பார்த்தாலும், பேசினாலும் பத்தாத மாதிரியே ஒரு பீலிங் இருக்கும்... ஏன்னா காதல்ல எப்பவுமே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்... அது கல்யாணம் பண்ணப்புறம் மிஸ்ஸிங்...
அது என்னன்னு சொல்ல முடியாது... உங்களுக்கே தெரியும்... ஆரம்பத்துல Attract பண்ணனும்னு ஒரு ஆர்வத்துல அசத்தும் ஆண்கள், அந்த எண்ணம் நிறைவேறியவுடன் அந்த ஆர்வத்தை குறைத்தால் பரவாயில்லை... அந்த எண்ணத்தையே குழி தோண்டி புதைத்து விடுகிறான்... இதுதான் பிரச்சினையே... அங்குதான் அவன் தன்னுடைய நிஜமான முகத்தை காட்டுகிறான்..
காதலிக்கும் போதோ, கல்யாணமான புதிதில் இவன் இப்படி இல்லையே... இப்போ புதுசா என்ன கோவப்படுறார்ன்னு மனைவி நினைக்கும் போதுதான் சண்டையும், காழ்ப்புணர்ச்சியும் ஆரம்பிக்கின்றன...
"விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கையின் சிறப்புன்னு" கண்ணதாசன் சொல்லியிருக்கார்... எப்போ ஈகோன்ற போர்வை போத்த ஆரம்பிக்கறாங்களோ, அப்பவே அவங்களுக்குள்ள இருக்கற காதல் செத்துப்போகுது...
இந்த காதலை மெருகு குலையாமல் வைத்திருப்பது ரொம்ப ஈசிப்பா..
இப்போதான் மெயின் மேட்டெருக்கு நான் வர்றேன்..
கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியும் பொண்ணை அசத்தறதுக்கு கிப்ட் கொடுக்க காரணம் தேடுவீங்கள்ள... அதே மேட்டர்தான்..
அப்பப்போ.. சின்ன சின்னதா கிப்ட் கொடுத்து அசத்தலாம்... புடவை, மோதிரம், செயின்னு வாங்கனும்னு அவசியம் இல்லை.. ரொம்ப நாள் முன்னாடி, ரோட்டுல போகும்போது கேட்ட கடாயோ, ஏன் கரண்டி கூடத்தான் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வாங்கிக்கொடுக்கலாம்..
life fulla கூட இருக்கப்போற ஒரு ஜீவனுக்காக, நமக்காக, நம்ம family-க்காக உழைக்கிற அவங்ககிட்ட, daily சாப்டியான்னு ஒரு போன் பண்ணி கேட்டாக்கூட போதும்.. சந்தோசமாயிடுவாங்க..
சாப்பாட்டுல உப்போ, காரமோ அதிகமவோ, குறைஞ்சோ இருந்தால் என்ன உரிமைல திட்டுவீங்களோ, அதே சமையல் நல்ல இருந்துச்சுன்னா என்னைக்காவது பாராட்டி இருக்கீங்களா.. அதை செஞ்சி பாருங்க... அடுத்தவாட்டி சமையல் இன்னும் நல்லா செய்வாங்கோ... எங்க அம்மா இதைவிட நல்லா செய்வாங்கன்னு மட்டும் சொல்லிடாதீங்க... அதோட மேட்டர் ஓவர்..
அவங்களுக்கே தெரியாமல் அவங்களுக்குள் இருக்கும் திறமைய கண்டு பாராட்டினா உங்க மேல இன்னும் affection and love அதிகமாகும்...
மாதம் ஒரு வாட்டி மனைவிய குழந்தைகள் இல்லாமல் தனியாக வெளியே கூட்டிட்டு போங்க பாஸ்.. அப்புறம் பாருங்க.. லவ்வுடு ஸ்டார்ட் ஆயிடும்...
உண்மையா அவங்கள நம்புங்க.. நீங்க நம்புறீங்கன்னு அவங்கள நம்ப வைங்க... அது போதும்...
"சின்னதாய் ஒரு தாஜ்மஹால் கட்ட ஆசை... எப்போதடி சாவாய்" அப்படிங்கற ரேஞ்சுல பொண்டாட்டி மேல புருஷன் affection வச்சிருந்தா.... அவ்ளோதான்... க்ளோஸ்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக